தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம்

(உயர்கல்வித் துறை, தமிழக அரசு)
தொழில்நுட்ப கல்வி இயக்கக வளாகம், சென்னை 600 025

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் 1984-ம் ஆண்டு தன்னாட்சி பெற்ற நிறுவனமாக தமிழக அரசால் நிறுவப்பட்டது. பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ள பல்வேறு திட்டங்களை நமது மன்றம் செயல்படுத்தி வருகிறது. இதன் முக்கிய நோக்கங்கள்:

  • நமது மாநிலத்தின் வளர்ச்சி, குறிக்கோள்கள் இவற்றை நோக்கமாக கொண்டு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்த தேவையான துறைகளை இனம் காணுதல், ஊரக மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல்.
  • தொழில்நுட்ப, அரசாங்க மற்றும் சட்ட ரீதியான கொள்கைகள் நமது குறிக்கோள்களுக்கும், கொள்கைகளுக்கும் தேவையான ஆலோசனைகளை நமது அரசாங்கத்திற்கு வழங்குதல் : முக்கியமாக கல்வி சுகாதாரம் மற்றும் மனித வளம் போன்ற துறைகளில் மனித ஆற்றலை மேம்படுத்துவது மற்றும் இதன் மூலம் அறிவியல் ரீதியாக இயற்கை வளங்களை பேணுதல்.
  • அரசாங்கம், அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வேளாண் நிறுவனங்கள் இடையே நல்ல முறையில் இணைப்பை ஏற்படுத்துவது மற்றும் பேணுதல்.
  • நமது பல்கலைக்கழகங்கள், அறிவியல் ஆய்வு நிறுவனங்கள், தமிழ்நாடு அறிவியல் கழகம் போன்ற பல்வேறு அமைப்புகள் மூலம் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்ள நிதியுதவி அளித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்.
  • அறிவியல் தொழில்நுட்ப பரவலாக்கத்தை கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்வுகள், கண்காட்சிகள் போன்ற நிகழ்வுகள் மூலமாக பொதுமக்கள் மற்றும் இதர தரப்பினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • நமது மன்றத்தின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும்
      •  குறிப்பிட்ட பகுதிகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு அறிவியல் தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணுதல்.
    •            மக்களிடையே அறிவியல் மனப்பாங்கினை ஏற்படுத்துதல்.

    போன்ற இலக்கினை அடையும் வண்ணம் வடிவமைக்கப் பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்ப திட்டங்கள் குறித்த சுருக்கமான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

       அறிவியல் தொழில்நுட்ப மனித ஆற்றலை பெருக்குதல்.

Organization Structure