நமது மாநிலத்தில் பல்வேறு துறைகளில் அறிவியல் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் பல்கலைக்கழகங்கள், ஆய்வு மையங்கள் மற்றும் கல்லூரிகளில் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் வெளிக்கொணரப்படும் நன்மை பயக்கும் தொழில்நுட்பங்களும், அறிவியல் செயல்பாடுகளும் இதன் பயனாளிகளை சென்றடைய சிறிது காலம் தேவைப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு புதுமைத் தொழில்நுட்பமும் பரவலாக்கமும் திட்டத்தின் மூலம் நமது மாநிலத்திலுள்ள மத்திய, மாநில கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களில் வெளிக்கொணரப்படும் புதிய பயனுள்ள தொழில்நுட்பங்களை கல்வி மற்றும் அறிவியலாளர்கள் மூலம் உரிய பயனாளிகளுக்கு விரைவில் எடுத்துச் செல்ல தேவையான பயிற்சி மற்றும் பட்டறைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. 2018-2019ல் ரூ.9 இலட்சம் செலவில் 18 பயிற்சிகள் நடத்தப்பட்டது.

பயனாளிகள்

பயனாளிகள் விரைவில் அறிவிக்கப்படும்!!!