இத்திட்டத்தின் நோக்கம் படைப்புகள் மற்றும் புதுமையான யோசனைகள் போன்றவற்றை மாணவர் மற்றம் சமுதாயத்தின் மற்ற கண்டுபிடிப்பாளர்களை ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றம், முறையான கல்வி மற்றும் தொழில்துறை நிறுவனங்களுடன் இணைத்தல். மேலும், கண்டுபிடிப்பாளர்களின் மத்தியில்புதுமையான யோசனைகள், முறைகள் மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றைகண்டறிவது. புதுமையாக்க அடிப்படைக் கருத்துக்களைப் புரிந்துக் கொள்வது இளைஞர்களிடையே புதுமை மற்றும் முன்மாதிரி / தயாரிப்பு மேம்பாட்டு கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு பங்களிக்க செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். அடையாளம் காணப்பட்ட புதுமையாக்க கண்டுபிடிப்புக்கு தொழில்நுட்ப / தேவையான உள்கட்டமைப்புகள் மூலம் உதவுதல் சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிப்பதில் உதவுதல் மற்றும் தொழில்துறையினரை தொடர்பு கொள்ள உதவுதல் ஆகியன அடங்கும். புதுமைகளின் பாதுகாப்புக்கு தேவைப்பட்டால் அறிவுசார் சொத்து உரிமை மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் ஒத்துழைக்க ஊக்கப்படுத்துதல். ஆர்வமுள்ள புதுமைகள் வரவேற்க்கப்பட்டு நிபுணர் குழு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் புதுமை கண்டுபிடிப்புக்கு நிதி உதவியாக ரூ.50000/- முதல் 100000/- அளிக்கப்படும். 2021-2022 ம் ஆண்டில் 10 புதுமைகளுக்கு ரூ.10 இலட்சம் செலவில் உதவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2022-2023ஆம் ஆண்டில் இத்திட்டம் ரூ.10 இலட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

பயனாளிகள்

பயனாளிகள் விரைவில் அறிவிக்கப்படும்!!!