நமது மாநிலத்திலுள்ள கல்லூரிகளுக்கு அறிவியல் ஆய்வுத் திட்ட நிதியுதவி பெரும்பாலும் கிடைப்பதில்லை. மத்திய அரசின் அறிவியல் ஆய்வுத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் பெரும்பாலும் பல்கலைக்கழகங்களின் பயன்பாட்டிற்கு துணைபுரிகின்றன. உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களின் எண்ணிக்கை வளர்ந்துள்ள அளவிற்கு கல்லூரிகளிலுள்ள ஆய்வு மாணவர்களுக்கான ஆய்வு நிதியுதவி வளரவில்லை. எனவே, இத்திட்டத்தின்மூலம் நல்ல ஆய்வு முயற்சிகளை கல்லூரிகள் அளவில் ஊக்குவிப்பதோடு இதன் மூலம் அறிவியல் ஆய்வு மாணவர்களின் ஆய்வுத் திறமை மற்றும் ஆய்வாளர்களின் எண்ணிக்கையையும் மேம்படுத்தலாம். இதன் மூலம் திறமையான கல்லூரி மாணவர்கள் தங்களது சிறந்த ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ள நிதிப்பற்றாக்குறை ஒரு தடையாக இருக்காது. இத்திட்டத்திற்காக 2018-2019ல் நிதியுதவி ரூ.30 இலட்சம் என அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 மாணவர்கள் பயன்பெறுவர்.

பயனாளிகள்

பயனாளிகள் விரைவில் அறிவிக்கப்படும்!!!