இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களிடையே இருக்கும் திறமைகளை அறிவியல் தொழில்நுட்பத்திற்கு பயன்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், அறிவியல் தொழில்நுட்பவியல், மருத்துவயியல், வேளாண்மையியல், கால்நடை மருத்துவயியல், சமூகவியல், உயிரியியல் போன்ற துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் இறுதியாண்டில் பயின்றுவரும் மாணவர்களுக்கு சமூக சம்பந்தமுள்ள ஆராய்ச்சித் திட்டங்களைச் செய்வதற்கு அதிகபட்சமாக ரூ. 10,000/- வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 2018-2019ம் ஆண்டில் மொத்தம் ரூ.52 இலட்சம் (தமிழக அரசு ரூ.40 இலட்சம் + மத்திய அரசு ரூ.12 இலட்சம்) செலவில் 700 மாணவர் ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது. 2019-20 ஆம் ஆண்டில் 700 மாணவர் ஆய்வுத் திட்டங்களை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பயனாளிகள்

பயனாளிகள் விரைவில் அறிவிக்கப்படும்!!!