இத்திட்டத்தின் கீழ், தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகள்/ ஆராய்ச்சி மையங்களில் பணி புரிந்து வரும் 40 வயதுக்கு கீழ் உள்ள இளம் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பன்னாட்டு மாநாடுகளில் கலந்து கொண்டு தங்களுடைய ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகளைச் சமர்ப்பிக்க செல்லுவதற்குத் தேவையான விமான பயணத்தொகையில் 50 விழுக்காடு வரை நிதி உதவியும் மற்றும் அத்தகைய உள்நாட்டு மாநாடுகளில் பங்கு கொள்வதற்கு 100 விழுக்காடு இரயில் பயணக்கட்டணமும் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக ஆய்வாளர்களுக்கு ரூ.2.50 இலட்சம் செலவில் உதவி அளித்து கருத்தரங்குகளில் பங்கு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பயனாளிகள்
பயனாளிகள் விரைவில் அறிவிக்கப்படும்!!!