40 வயதுக்குட்பட்ட இளம் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொழில்நுட்பங்களின் நுணுக்கங்களை நன்கு கற்றுக் கொள்வதற்காக, அவர்களை வெளிமாநிலத்திலுள்ள, பல்கலைக்கழகங்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் ஏதாவது ஒன்றில் ஒரு முதுநிலை அறிவியலறிஞருடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்யவும் நுண் கருவிகளின் செயல்முறை தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளவும் ஊக்கப்படுத்துவது தான் இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின்படி அவர்களுக்கு தாங்கள் பணிபுரியும் தாயக நிறுவனங்களில் பெற்றுவரும் மாதச் சம்பளத்துடன் கூடுதலாக ஆதரவு ஊதியம் இரண்டு முதல் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும். 2018-2019ம் ஆண்டில் ரூ.3 இலட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டத்தை 2019-2020ம் ஆண்டில் ரூ.3 இலட்சம் செலவில் ஆய்வாளர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகள்
பயனாளிகள் விரைவில் அறிவிக்கப்படும்!!!