நமது மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் அறிவியலில் திறமை வாய்ந்த இளம் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி போதனை செய்து அவர்களிடையே அறிவியல் மற்றும் ஆய்வு படிப்பை தேர்ந்தெடுப்பதற்குரிய ஆர்வத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பெயர் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்தில் திறமை வாய்ந்த பேராசிரியர்களால் 15 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆண்டுந்தோறும் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 640 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.25 இலட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.